இந்தியா

'மாற்றத்தைக் கொண்டு வந்த தில்லி மக்களுக்கு நன்றி' - கேஜரிவால்

DIN

தில்லியில் மாற்றத்தைக் கொண்டு வந்ததற்கு மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) 250 வாா்டுகளுக்கு கடந்த 4-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகளை எண்ணும் 42 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே இழுபறி நீடித்து வந்தது. ஆனால், கடைசி சுற்றுகளில் ஆதிக்கம் செலுத்திய ஆம் ஆத்மி கட்சி வெற்றிக்கு தேவையான 126 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 132 இடங்களிலும் பாஜக 104 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. 

இதையடுத்து தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்ட ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது பேசிய முதல்வர் கேஜரிவால், 'இந்த வெற்றிக்காக தில்லி மக்களுக்கு எனது வாழ்த்துகள். மாற்றத்தை கொண்டு வந்ததற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தில்லியில் நாங்கள் வேலை செய்ய பாஜகவும் காங்கிரஸும் ஒத்துழைக்க வழங்க.வேண்டும். மத்திய அரசிடமும்  மோடியிடமும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். ஊழலற்ற தில்லியை உருவாக்க வேண்டும். தில்லி மக்கள் இன்று நாட்டுக்கே ஒரு முக்கியமான செய்தியை கொடுத்திருக்கிறார்கள்' என்றார். 

மணீஷ் சிசோடியா, 'ஆம் ஆத்மிக்கு இந்த வெற்றியை வழங்கியதற்காக தில்லி மக்களுக்கு நன்றி. இது வெறும் வெற்றி மட்டுமல்ல, தில்லியை தூய்மையாகவும் சிறப்பாகவும் மாற்றுவதற்கான பெரிய பொறுப்பு' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT