இந்தியா

காங்கிரஸ் முன்னாள் எம்.பி.தேவதாஸ் பாமகவில் இணைந்தார்!

7th Dec 2022 03:52 PM

ADVERTISEMENT

 

காங்கிரஸ் முன்னாள் எம்.பி.தேவதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொருளாளரும், தொழிலதிபருமான சேலம் ராமசாமி உடையாரின் மகனும், சேலம் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான தேவதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்துள்ளார். 

ADVERTISEMENT

படிக்க: மாண்டஸ் புயல் பற்றி வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன? முழு தகவல்!

பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்த தேவதாஸ் கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதற்கான கடிதத்தை ராமதாஸ் வழங்கினார். 

இந்த நிகழ்வின் போது  பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும்,  வன்னியர் சங்கத்தின் செயலாளருமான கார்த்தி உடனிருந்தனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT