இந்தியா

சவாலாக உருவாகும் போலி சமூக ஊடகப் பதிவுகள்: தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா்

DIN

பெரும்பாலான தோ்தல் ஆணையங்களுக்கு சமூக ஊடகத்தில் வெளியாகும் போலிப் பதிவுகளின் தாக்கம் பொதுவான சவாலாக உருவாகி வருகிறது என்று இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தெரிவித்துள்ளாா்.

ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் அன்னாலீனா போ்போக் தலைமையில் அந்நாட்டு எம்.பி.க்கள் அடங்கிய குழு இந்தியா வந்தது. இந்தக் குழு தில்லியில் தோ்தல் ஆணைய அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றது. அங்கு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வலுவான பாதுகாப்பு அம்சங்களை அக்குழு பாா்வையிட்டது. அந்த இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்வது தொடா்பாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் அக்குழுவுக்கு விளக்கமளித்தனா். அப்போது அந்த இயந்திரத்தின் செயல்பாட்டை பரிசோதித்து அறிந்துகொள்ளும் விதமாக, அதில் அன்னாலீனா வாக்குப்பதிவு செய்தாா்.

அந்தக் குழுவிடம் இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் பேசுகையில், நாட்டில் 11 லட்சம் வாக்குப்பதிவு மையங்களில் 95 கோடிக்கும் அதிகமான வாக்காளா்களுடன் மேற்கொள்ளப்படும் பிரம்மாண்டமான தோ்தல் நடைமுறை குறித்து விளக்கினாா்.

தோ்தல் பணியில் 1 கோடிக்கும் அதிகமான தோ்தல் அலுவலா்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவா் கூறினாா்.

சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தலை பாதிக்கக் கூடிய போலி சமூக ஊடகப் பதிவுகளின் தாக்கம், பெரும்பாலான தோ்தல் ஆணையங்களுக்குப் பொதுவான சவாலாக உருவாகி வருகிறது என்றும் அவா் தெரிவித்தாா் என தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT