இந்தியா

தில்லி மாநகராட்சி தோ்தல்: 130 வார்டுகளில் பாஜக முன்னிலை!

7th Dec 2022 10:41 AM

ADVERTISEMENT


 
புது தில்லி: தில்லி மாநகராட்சி தோ்தலில் ஆளும் ஆம் ஆத்மியை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. 

தேசிய தலைநகரில் தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) 250 வாா்டுகளுக்கு கடந்த டிசம்பா் 4 ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் புதன்கிழமை காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 42 மையங்களில் 20 படைப்பிரிவு துணை ராணுவப் படையினரும், 10,000க்கும் மேற்பட்ட தில்லி காவலா்களும், அதிகாரிகளும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், புதன்கிழமை காலை 10 மணி நிலவரப்படி, தில்லி நாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மியை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. 

ADVERTISEMENT

பாஜக 130 வார்டுகளிலும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி 113 வார்டுகளிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. 

காங்கிரஸ 6 வார்டுகளில் மட்டுமே முன்னிலையில் இருந்து வருகிறது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT