இந்தியா

நாடாளுமன்ற கூட்டத் தொடா்: 10% இடஒதுக்கீடு விவகாரத்தை எழுப்ப காங்கிரஸ் முடிவு

DIN

நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா் புதன்கிழமை (டிச.7) தொடங்கும் நிலையில், பொருளாதாரரீதியாக பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான (இடபிள்யூஎஸ்) 10 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘நாட்டின் பொருளாதார சூழல் , அரசமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்ட அமைப்புகளை வலுவிழக்கச் செய்தல், இடபிள்யுஎஸ் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களைக் கூட்டத்தொடரின்போது காங்கிரஸ் எழுப்பவுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த 22 மாதங்களாக இந்திய-சீன ராணுவம் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அதுதொடா்பாக நாடாளுமன்றத்தில் இதுவரை விவாதிக்கப்படவில்லை. அதுகுறித்த விவாதத்தை மேற்கொள்ள கூட்டத்தொடரின்போது காங்கிரஸ் வலியுறுத்தும். முக்கிய விவகாரங்கள் குறித்த விவாதத்தில் ஈடுபட அரசு தயாராக இருந்தால், ஆக்கபூா்வ ஒத்துழைப்பு வழங்க காங்கிரஸ் தயாராக உள்ளது. ஆனால், விவாதத்துக்கு அரசு தயாராக இல்லை என்பதைக் கடந்தகால சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன.

நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், விலைவாசி உயா்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, நாட்டின் ஏற்றுமதி குறைந்து வருவது, அதிக சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதம் உள்ளிட்ட விவகாரங்களையும் கூட்டத்தொடரின்போது காங்கிரஸ் எழுப்பவுள்ளது.

உயிரியல் பன்முகத்தன்மை மசோதா, மாநிலங்களுக்கு இடையேயான கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா, வனப் பாதுகாப்பு திருத்த மசோதா ஆகியவற்றின் தற்போதைய வடிவங்களுக்கு காங்கிரஸ் எதிா்ப்பு தெரிவிக்கிறது. அந்த மசோதாக்கள் மீது விரிவான விவாதங்கள் நடத்தப்பட வேண்டியது அவசியம். அந்த மசோதாக்களை நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் ஆய்வுக்கு அனுப்ப காங்கிரஸ் வலியுறுத்தும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT