இந்தியா

ஒற்றுமை நடைப்பயணம்: காங்கிரஸ் தொண்டர் வீட்டில் தேநீர் அருந்திய ராகுல்

7th Dec 2022 02:54 PM

ADVERTISEMENT

கோட்டா: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்போத, காங்கிரஸ் தொண்டரின் வீட்டில் ராகுல் தேநீர் அருந்தினார்.

கோட்டாவில் ஒற்றுமை நடைப்பயணம் சென்று கொண்டிருந்த நிலையில், ஒரு காங்கிரஸ் தொண்டர் வீட்டில் ராகுல் காந்தி தேநீர் அருந்தினார். இதனால், நடைப்பயணம் அங்கே 35 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.

இதையும் படிக்க.. நாடகம் பார்த்த குற்றத்துக்காக 2 சிறார்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இதுவரை 2,400 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்துள்ளது. இன்று காலை 6 மணிக்கு நடைப்பயணம் தொடங்கியது. ராகுலுடன் பல்வேறு நடனக் கலைஞர்கள் நடைப்பயணத்தில் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

கிராம மக்கள் சாலையின் இருபுறத்திலும் நின்று கொண்டு ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைப்பயணம் சென்று கொண்டிருந்த நிலையில், அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர் இல்லத்துக்குச் சென்ற ராகுல் தேநீர் அருந்தினார்.

காங்கிரஸ் தொண்டர் மீனாவின் இல்லத்துக்குச் சென்ற ராகுல் அங்கு அவர் அளித்த பனைவெல்ல தேநீரை அருந்தினார். அவர் அதனை விரும்பு வேண்டிக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பனைவெல்ல தேநீர் அவருக்கு வழங்கியதாவும், அவர் அந்த தேநீரை ருசித்துக் குடித்ததாகவும் மீனா கூறினார்.

ராகுல் கலந்தியுடன் முதல்வர் அசோக் கெலாட்டும் தேநீர் அருந்தினர். இருவரும் தேநீரின் சுவை அலாதியாக இருந்ததாகத் தங்களது பாராட்டுகளைவும் தெரிவித்துக் கொண்டனர்.

அப்போது, அங்கிருந்த விவசாயிகள், இங்கு தண்ணீர் பிரச்னை இருப்பதாகவும் கால்வாய் அமைத்தால் பிரச்னை சரியாகும் என்றும் கோரிக்கை வைத்தனர். உடனடியாக அதனை சரி செய்யுமாறு ராகுல், அசோக் கெலாட்டைக் கேட்டுக் கொண்டார்.

பறக்கும் முத்தம் அளித்த ராகுல்!

நேற்று இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பிரதமா் நரேந்திர மோடியை வாழ்த்தி முழக்கமிட்டவா்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்தவாறும், அவா்களை நோக்கி கையசைத்தவாறும் ராகுல் காந்தி கடந்து சென்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT