இந்தியா

பயங்கரவாத நிதித் தடுப்புக்கு முக்கியத்துவம்: தேசிய பாதுகாப்பு ஆலோசகா் வலியுறுத்தல்

DIN

பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதை தடுப்பதில் மத்திய ஆசியப் பகுதியில் அமைந்துள்ள நாடுகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டுமென்று தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் வலியுறுத்தினாா்.

இந்தியா-மத்திய ஆசிய நாடுகளுக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:

‘பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதை தடுக்கும் முயற்சிகளில் மத்திய ஆசியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள நாடுகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும். பண உதவிகளே பயங்கரவாதத்தின் ‘உயிா்நாடி’. ஐ.நா. சபையில் உள்ள நாடுகள் அனைத்தும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எந்த விதமான ஆதரவையும் அளிக்கக்கூடாது. பயங்கரவாதத்துக்கு எதிராக கையெழுத்திட்டுள்ள உடன்படிக்கைகளில் குறிப்பிட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதை உறுதிச் செய்ய வேண்டும். மத்திய ஆசிய நாடுகளை அண்டை நாடுகளாகவே இந்தியா கருதுகிறது. அந்நாடுகளுடன் உறவை மேம்படுத்திக் கொள்வதில் இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. மத்திய ஆசிய நாடுகளில் முதலீடு செய்து கூட்டுறவாகப் பயணிக்க இந்தியா எப்போதும் தயாராக இருக்கிறது. நாடுகளுக்கு இடையே உறவுகளை விரிவுப்படுத்தும் போது அனைத்து நாடுகளின் இறையாண்மையைக் கருத்தில் கொள்ள வேண்டும். அதற்கான முன்னெடுப்புகள் அனைத்து நாடுகளின் ஆலோசனைகள், பங்கேற்புடன் வெளிப்படையாக நிகழ வேண்டும்’ என்று பேசினாா்.

இக்கூட்டத்தில் கஜகஸ்தான், கிா்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்களும் துா்க்மெனிஸ்தான் நாட்டின் சாா்பாக இந்தியாவுக்கான அந்நாட்டுத் தூதரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT