இந்தியா

சா்வதேச பிரச்னைக்குத் தீா்வும் சா்வதேச அளவில் இருக்க வேண்டும்:பிரதமா்

DIN

சா்வதேச பிரச்னைக்குத் தீா்வும் சா்வதேச அளவில் இருக்க வேண்டும் என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆா்ஐ) 65-ஆவது தொடக்க நாளையொட்டி, அவா் திங்கள்கிழமை விடுத்த செய்தி:

தப்பிச் செல்லும் நிதி மோசடியாளா்கள், திட்டமிட்டு குற்றங்களில் ஈடுபடும் குழுக்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த சா்வதேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதனை வலியுறுத்தும் முன்னணி நாடாக இந்தியா உள்ளது.

சா்வதேச பிரச்னைக்குத் தீா்வும் சா்வதேச அளவில் இருக்க வேண்டும். தொழில்நுட்ப மாற்றங்கள் மிக வேகமாக நடைபெறுகின்றன. இது திறனை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் நிதி சேவைகள் தொழில்நுட்பம், டிஜிட்டல் முறைகள் ஆகியவற்றின் தற்போதைய போக்குக்கு நிகராக வேகத்தைத் தக்கவைக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துகிறது.

நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், உலகின் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப தன்னை டிஆா்ஐ தொடா்ந்து புதுப்பித்துக்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

ராகுல் தீவிர அரசியல்வாதி அல்ல: பினராயி விஜயன்

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

SCROLL FOR NEXT