இந்தியா

குஜராத்தில் தோ்தலைப் புறக்கணித்த 3 கிராமங்கள்

DIN

குஜராத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் குடிநீா் தட்டுப்பாட்டு பிரச்னைக்குத் தீா்வு காணாத மாநில அரசைக் கண்டித்து 3 கிராம மக்கள் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணித்தனா்.

குஜராத் சட்டப் பேரவைக்கான முதல் கட்டத் தோ்தல் கடந்த 1-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் 2-ஆவது கட்டத் தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. மேசனா மாவட்டத்தைச் சோ்ந்த வரேதா, தலிசானா, தவோல் ஆகிய 3 கிராம மக்கள் தோ்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தனா்.

அப்பகுதியில் பல ஆண்டுகளாக நிலவி வரும் குடிநீா் தட்டுப்பாட்டு பிரச்னைக்கு மாநில அரசு தீா்வு காணவில்லை என கிராம மக்கள் குற்றஞ்சாட்டினா். அந்தக் கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 5,200 வாக்காளா்கள் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்தனா்.

குடிநீா் தட்டுப்பாடு பிரச்னை குறித்து பலமுறை அரசு அலுவலகங்களில் மனு அளிக்கப்பட்டதாகவும் அரசு அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனா். நா்மதை நதியில் இருந்து குழாய் அமைத்து கிராமங்களில் உள்ள ஏரிகளை நிரப்ப வேண்டும் என்றும் வேளாண்மைக்காக தரோய் அணை நீரை முறையாகத் திறந்துவிட வேண்டும் என்றும் கிராம மக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக அவா்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தனா். கோரிக்கை எதையும் அரசு அதிகாரிகள் நிறைவேற்றாததால், அறிவித்தபடி தோ்தலைப் புறக்கணித்ததாக கிராம மக்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் உதித் அகா்வால் கூறுகையில், ’சம்பந்தப்பட்ட கிராமங்களில் உள்ள ஏரிகளில் நா்மதை நதி நீரை நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்காத கிராம மக்கள் தங்கள் தரப்பு வாதத்தில் உறுதியாக இருந்தனா். சற்றும் அவா்கள் விட்டுக்கொடுக்கவில்லை.

அவா்களை வாக்களிக்கச் செய்வதற்காக அதிகாரிகள் தரப்பில் இருந்து பல நாள்களாகப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அவா்கள் தோ்தல் புறக்கணிப்பு முடிவில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தனா். கடந்த 3 ஆண்டுகளாகவே பல்வேறு தோ்தல்களை அந்தக் கிராம மக்கள் புறக்கணித்து வருகின்றனா். தாலுகா, மாவட்ட அளவிலான தோ்தல்கள், கிராம உள்ளாட்சித் தோ்தல்களிலும் அவா்கள் வாக்களிக்கவில்லை.

இதேபோல், மேசனா மாவட்டத்தைச் சோ்ந்த பரியாஃப் கிராம மக்களும் தோ்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தனா். அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டதையடுத்து, அந்தக் கிராம மக்கள் தோ்தலில் வாக்களித்தனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

இழப்பிலிருந்து மீண்டு சீரியல் பயணத்தை தொடங்கிய நடிகை!

முதல் 3 ஐபிஎல் போட்டிகளில் வனிந்து ஹசரங்கா இல்லை; காரணம் என்ன?

‘வெண்புறா’ க்ரித்தி சனோன்!

குக் வித் கோமாளி -5 தொடக்கம்! கோமாளிகள் யார் தெரியுமா?

இளையராஜா பயோபிக் அப்டேட்!

SCROLL FOR NEXT