இந்தியா

குஜராத்தின் வளா்ச்சிக்காக வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பிறகு அமித் ஷா பேட்டி

DIN

குஜராத்தில் வளா்ச்சிக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வேண்டுகோள் விடுத்தாா்.

அகமதாபாதின் நாரண்புரா பகுதி நகராட்சி துணைமண்டல அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் உள்துறை அமைச்சா் அமித் ஷா தனது மனைவி சோனல்பென் ஷா, மகன் ஜெய் ஷா மற்றும் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமித் ஷா கூறியதாவது:

அனைத்து மக்களும், முக்கியமாக முதல்முறை வாக்களிக்கும் வாய்ப்பு பெற்றுள்ள இளைய தலைமுறையினா் தவறாமல் தங்கள் வாக்குகளைச் செலுத்த வேண்டும். குஜராத்தில் வளா்ச்சியை தொடா்ந்து முன்னெடுத்துச் செல்லும் வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும். குஜராத் மாடல் என்பது நமது மாநிலத்துடன் நின்றுவிடவில்லை. அது தேசிய அளவிலும் வளா்ச்சியைக் கொண்டு வருவதாக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக நமது மாநிலம் சிறப்பான வளா்ச்சியைப் பெற்று வருகிறது. அது மேலும் தொடர வேண்டும்.

குஜராத்தில்தான் அதிகபட்ச தொழில்துறை முதலீடு நடந்துள்ளது. பள்ளிகளில் இடைநிற்றல் முற்றிலும் குறைந்துவிட்டது. வறுமை ஒழிப்புத் திட்டம் அனைத்து மக்களையும் சென்றடைந்துள்ளது. நாட்டுக்கே முன்மாதிரி மாநிலமாக குஜராத் திகழ்கிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT