இந்தியா

நாடாளுமன்ற கூட்டத் தொடா்: அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது!

6th Dec 2022 11:30 AM

ADVERTISEMENT

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் நாளை தொடங்கவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகள் கூட்டம் இன்று நடைபெற்று வருகின்றது.

குஜராத், ஹிமாசல பிரதேச மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தல்கள் மற்றும் 6 சட்டப்பேரவை மற்றும் ஒரு மக்களவை தொகுதிகளின் இடைத்தோ்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக குளிா்கால கூட்டத் தொடா் தொடங்குகிறது.

இந்நிலையில், முக்கியத் தீா்மானங்கள், விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு இன்று கூட்டியுள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற விவாகரத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி, திமுக மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ADVERTISEMENT

அதுபோல, நாடாளுமன்றத் தலைவா் ஓம் பிா்லா தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆலோசனைக் குழு (பிஏசி) கூட்டமும் இன்று மாலையில் தனியாக நடைபெற உள்ளது. வழக்கமான அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பதிலாக இந்த முறை பிஏசி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதில், மக்களவையில் முன்வைக்கப்படவுள்ள தீா்மானங்கள் மற்றும் எந்தெந்த கட்சிகள் விவாதத்தில் பங்கேற்க உள்ளன என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதையும் படிக்க | வங்கக் கடலில் நாளை உருவாகிறது புயல்சின்னம்

இந்தக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்துவதற்கு 16 புதிய மசோதாக்களை மத்திய அரசு கடந்த வாரம் பட்டியலிட்டது. கூட்டத்தொடா் சுமுகமாக நடைபெறுவதை உறுதிப்படுத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கட்சித் தலைவா்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

டிசம்பா் 29-ஆம் தேதி வரை 23 நாள்கள் நடைபெறும் குளிா்கால கூட்டத்தொடரில் 17 அமா்வுகள் இடம்பெற உள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT