இந்தியா

கொல்கத்தா அருகே பயங்கர தீ விபத்து: சாலையோர கடைகள் எரிந்து நாசம்!

6th Dec 2022 12:39 PM

ADVERTISEMENT

 

கொல்கத்தா அருகே உள்ள நியூ டவுனில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 சாலையோரக் கடைகள் எரிந்து நாசமானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

கௌரங்காநகரில் உள்ள தளாய் பாலம் அருகே உள்ள பாக்ஜோலா கால்வாயை ஒட்டிய கடை ஒன்றில் அதிகாலை 4 மணியளவில் தீப்பிடித்துள்ளது. 

தீயானது மளமளவென அப்பகுதியில் உள்ள மற்ற கடைகளுக்கும் பரவியது. இதனால் 20-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகியுள்ளது. 

ADVERTISEMENT

படிக்க: திருவண்ணாமலையில் வெகு விமரிசையாக ஏற்றப்பட்டது பரணி தீபம்!

இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு நான்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்துவந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT