இந்தியா

அம்பேத்கர் நினைவு நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி!

6th Dec 2022 11:01 AM

ADVERTISEMENT

அம்பேத்கர் நினைவு நாளையொட்டி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நாடு முழுவதும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 66-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT

இந்த நிகழ்வில், குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, அமைச்சர்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT