இந்தியா

தவறுதலாக வெடித்த காவலரின் துப்பாக்கி: கேரள முதல்வர் இல்லத்தில் பதற்றம்!

6th Dec 2022 12:12 PM

ADVERTISEMENT

கேரள முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

திருவனந்தபுரத்தில் கேரள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான ‘கிளிஃப் ஹவுஸ்’ அமைந்துள்ளது. இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் தனது துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, இன்று காலை 9.15 மணியளவில் தவறுதலாக கைப்பட்டதில் தரையை நோக்கி குண்டு பாய்ந்ததாக கூறப்படுகிறது..

இதையும் படிக்க | வங்கக் கடலில் நாளை உருவாகிறது புயல்சின்னம்

இதுகுறித்து விசாரணை நடத்திய அருங்காட்சியகம் காவல் நிலைய அதிகாரி, இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

மேலும், சம்பவம் நடந்தபோது அதிகாரப்பூர்வ இல்லத்தில் முதல்வர் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT