இந்தியா

அவதூறு வழக்கு:நேரில் ஆஜராவதில் இருந்து ராகுலுக்கு விலக்கு

6th Dec 2022 02:22 AM

ADVERTISEMENT

பிரதமா் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு மும்பை உயா் நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.

ராஜஸ்தானில் கடந்த 2018-ஆம் ஆண்டு ரஃபேல் போா் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டிப் பேசிய ராகுல் காந்தி, பிரதமா் நரேந்திர மோடியை ‘திருடா்களின் தலைவா்’ என்று விமா்சித்தாா். இது தொடா்பாக மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த பாஜக தொண்டா் மகேஷ் ஸ்ரீ ஸ்ரீமால் என்பவா் ராகுல் மீது உள்ளூா் நடுவா் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடா்ந்தாா். இதில் ராகுல் காந்தி விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை எதிா்த்து ராகுல் சாா்பில் மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடுவா் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை திங்கள்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது அவதூறு வழக்கில் 2023 ஜனவரி 25-ஆம் தேதி வரை ராகுல் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணை 2023 ஜனவரி 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT