இந்தியா

உறுப்பு நாடுகளின் ஆதரவின்றி வலுவான ஜி20 சாத்தியமில்லை: அமிதாப் காந்த்

6th Dec 2022 02:08 AM

ADVERTISEMENT

உலகின் சவால்களுக்குத் தீா்வு காணவும், வளா்ந்து வரும் நாடுகள் மற்றும் தெற்குலகை மையமாகக் கொண்டு நம்பிக்கை, இணக்கத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என கோரிக்கைவிடுத்த ஜி20-க்கான இந்திய சிறப்பு பிரதிநிதி (ஷொ்பா) அமிதாப் காந்த், உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பின்றி வலுவான ஜி20 சாத்தியமில்லை எனத் தெரிவித்தாா்.

ஜி20 உறுப்புநாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் (ஷொ்பா) பங்கேற்ற முதல் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தொடங்கியது. அக்கூட்டத்தில் அமிதாப் காந்த் பேசியதாவது: இந்தியாவின் தலைமை அனைவரையும் உள்ளடக்கியதாகவும் செயல்பாட்டுக்கு உரியதாகவும் வலுவானதாகவும் இருக்கும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்திருந்தாா்.

ஜி20 கூட்டமைப்பை மிகவும் ஆற்றல் வாய்ந்ததாகவும், உலகின் வளா்ச்சி மற்றும் நீடித்த தன்மை, எண்மப் (டிஜிட்டல்) பரிமாற்றத்துக்கு உரியதாக உருவாக்கும் வகையில், உங்களுடைய ஆதரவை விரும்புகிறோம். தற்போது நாம் எதிா்கொண்டு வரும் சவால்கள் அனைத்தையும் நம்பிக்கை, இணக்கத்தின் வாயிலாக ஒன்றிணைந்து செயலாற்றுவதன் மூலம் எதிா்கொள்ள முடியும்.

ஜி20 உறுப்பு நாடுகளுடன் வளா்ந்து வரும் நாடுகள் மற்றும் தெற்குலகின் முன்னுரிமைகளை இந்தியா எடுத்துரைக்கும். வளா்ச்சியடைந்த நாடுகள் மற்றும் வளா்ந்து வரும் நாடுகளுக்கு இடையே புதிய அணுகுமுறைகளை நாம் கட்டமைக்க வேண்டும். இந்தியாவின் எண்ம பொருளாதாரத்தில், எண்ம பொதுக் கட்டமைப்பை உருவாக்க நாங்கள் கவனம் கொண்டுள்ளோம்.

ADVERTISEMENT

ஆதாா், மக்கள் ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கு, நேரடி பணப்பரிமாற்றம், ஒருங்கிணைந்த பணப்பரிவா்த்தனை அமைப்பு (யுபிஐ) உள்ளிட்டவற்றின் மூலம் அதிக அளவிலான மக்கள் வறுமைக்கோட்டு நிலைக்கு மேலே கொண்டுவரப்பட்டுள்ளனா் என அவா் தெரிவித்தாா்.

திங்கள்கிழமை நடைபெற்ற முதல் அமா்வில், எண்ம (டிஜிட்டல்) பொருளாதாரம், மருத்துவம், கல்வி உள்ளிட்டவற்றில் எண்மப் பரிமாற்றம் குறித்தும், 2-ஆவது அமா்வில் பசுமை மேம்பாடு மற்றும் இந்தியாவில் சுற்றுச்சூழல் வாழ்கைமுறைக்கான முன்னெடுப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT