இந்தியா

பிரதமா் தலைமையில் ஜனவரியில் தலைமைச் செயலா்கள் மாநாடு

6th Dec 2022 02:26 AM

ADVERTISEMENT

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தேசிய அளவிலான 2-ஆவது தலைமைச் செயலா்கள் மாநாடு புது தில்லியில் வரும் ஜனவரி மாதம் நடைபெற இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்கிறாா். அதற்கு முன்பாக தேசிய அளவிலான தலைமைச் செயலா்கள் மாநாடு பிரதமா் தலைமையில் புது தில்லியில் ஜனவரி மாதம் நடத்தப்பட உள்ளது. மத்திய-மாநில அரசுகளின் உறவை மேலும் பலப்படுத்துவதை தலைமைச் செயலா்கள் மாநாடு உறுதிப்படுத்தும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இம்மாநாட்டை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைக்கிறாா்.

மத்திய அமைச்சா்கள், மத்திய, மாநில அரசின் மூத்த அதிகாரிகள், இளம் மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்டோா் மாநாட்டில் பங்கேற்க உள்ளனா்.

ஹிமாசல பிரதேசத்தின் தா்மசாலாவில் கடந்த ஜூன் மாதம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் முதலாம் தலைமைச் செயலா்கள் மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT