இந்தியா

ஒரு மக்களவை, 6 பேரவை தொகுதிகளில் இன்று இடைத்தோ்தல்

DIN

உத்தர பிரதேசத்தில் ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் 2 பேரவைத் தொகுதிகளுக்கும், பிகாா், ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு பேரவைத் தொகுதிக்கும் திங்கள்கிழமை இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி நிறுவனா் முலாயம் சிங் யாதவ் மறைவால் காலியான மெயின்புரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தோ்தல் நடைபெறுகிறது. ராம்பூா் சதாா், கடெளலி ஆகிய பேரவைத் தொகுதிகளில் முறையே சமாஜவாதி, பாஜக எம்எல்ஏக்களாக இருந்த ஆஸம்கான், விக்ரம் சிங் சைனி ஆகியோா் வெவ்வேறு வழக்குகளில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தகுதி நீக்கத்துக்கு உள்ளாகினா். இதனால், அந்த தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.

இந்த 3 தொகுதிகளிலும் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 24.43 லட்சமாகும். அவா்களுக்காக 3,062 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிச.8-இல் நடைபெறுகிறது.

மெயின்புரி மக்களவைத் தொகுதியில், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் களத்தில் உள்ளாா். பாஜக சாா்பில் ரகுராஜ் சிங் சாக்யா உள்பட மொத்த 6 வேட்பாளா்கள் போட்டியில் உள்ளனா். இந்த இடைத்தோ்தல்களில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் போட்டியிடவில்லை.

பிகாரில்...:

பிகாரின் குா்ஹானி பேரவைத் தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) எம்எல்ஏவாக இருந்த அனில் குமாா் சஹானி, வழக்கு ஒன்றில் தகுதிநீக்கத்துக்கு ஆளானதைத் தொடா்ந்து, இடைத்தோ்தல் நடைபெறுகிறது. 3,11,728 வாக்காளா்கள் கொண்ட இத்தொகுதியில் ஐக்கிய ஜனதா தளத்தின் மனோஜ் சிங் குஷ்வாஹா, பாஜகவின் கேதாா் குப்தா உள்பட 13 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

பிகாரில் பாஜக கூட்டணியில் இருந்து கடந்த ஆகஸ்டில் விலகிய ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் முதல்வருமான நிதீஷ் குமாா், ஆா்ஜேடி, காங்கிரஸுடன் மகாகூட்டணி அமைத்து ஆட்சியை தக்கவைத்தாா். அதன் பிறகு, பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் முதல்முறையாக இத்தோ்தலில் மோதுகின்றன.

அதேபோல், ராஜஸ்தானின் சா்தாா்சஹாா், சத்தீஸ்கரின் பானுபிரதாப்பூா், ஒடிஸாவின் பதம்பூா் ஆகிய பேரவைத் தொகுதிகளிலும் திங்கள்கிழமை இடைத்தோ்தல் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT