இந்தியா

இந்தியாவின் இலக்குகளுக்கு தமிழகம் உறுதுணையாக இருக்கும்: மு.க.ஸ்டாலின்

5th Dec 2022 10:03 PM

ADVERTISEMENT

 

காலநிலை மாற்றத்தை தடுக்க இந்திய அரசின் இலக்குகளை எட்ட தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரி்வித்துள்ளார். 

உலகின் வலிமைமிக்க ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதன் உயரதிகாரிகள் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து ஜி20 உச்சி மாநாட்டுக்கான உத்திகளை இறுதி செய்வதற்காக மத்திய அரசு திங்கள்கிழமை அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். 

ADVERTISEMENT

அப்போது பேசிய அவர், இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம். இயற்கை பாதுகாப்பு காலநிலை மாற்றத்தை கையாள தமிழ்நாடு 'பசுமை காலநிலை நிறுவனத்தை' உருவாக்கியுள்ளது. 

உலகளவில் இந்தியா அளித்துள்ள உத்தரவாதங்களை காப்பாற்ற தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். இந்தியா ஜி-20 தலைமை ஏற்றுள்ள நிலையில் தமிழ்நாடு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் எனவும் தெரிவித்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT