இந்தியா

குஜராத்தில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக: கருத்துக் கணிப்புகள்

5th Dec 2022 07:20 PM

ADVERTISEMENT

    
குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் ஆட்சியைப் பிடிக்க 92 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் குறிப்பிட்டுள்ளன. 

குஜராத்தில் 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 93 தொகுதிகளுக்கு இன்று (டிச.5) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநிலத்தின் மத்திய, வடக்கு பகுதிகளில் உள்ள 14 மாவட்டங்களில் அடங்கிய 93 தொகுதிகளில் இன்று (டிச. 5) வாக்குப்பதிவு நடைபெற்றது. 

காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்நிலையில், ஆங்கில ஊடகங்கள் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன. 

ADVERTISEMENT

அதில், தற்போது ஆட்சியில் உள்ள பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

நியூஸ் எக்ஸ்: 
பாஜக 117 - 140 
காங்கிரஸ் 34 - 51
ஆம் ஆத்மி 6 - 3

என்டி டிவி:
பாஜக 125 - 130 தொகுதிகள்
காங்கிரஸ் 40 - 50
ஆம் ஆத்மி 3 - 5
இதர 3 - 7

டிவி 9:
பாஜக 125 - 130 
காங்கிரஸ் 40 - 50 
ஆம் ஆத்மி 3 - 5
இதர 3 - 7

Tags : exit polls
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT