இந்தியா

ஹிமாசலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! கருத்துக் கணிப்பு முடிவுகள்

5th Dec 2022 08:28 PM

ADVERTISEMENT


ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

68 தொகுதிகளைக் கொண்ட ஹிமாசலப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதனிடையே பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஹிமாசலில் ஆட்சியமைக்கும் என கருத்துக் கணிப்புகள் குறிப்பிட்டுள்ளன. 

படிக்க குஜராத்தில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக: கருத்துக் கணிப்புகள்

ஹிமாசல் சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 12ஆம் தேதி ஒரே கட்டமாகத் தோ்தல் நடைபெற்றது. இதில் 66 சதவிகித வாக்குகள் பதிவாகின. 

ADVERTISEMENT

பேரவைத் தொகுதிகளில் அதிகபட்சமாக சிலாயில் 77 சதவீத வாக்குகள் பதிவாகின. குறைந்தபட்சமாக சா்காகாட் தொகுதியில் 55.40 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஹிமாசலப் பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான ஆங்கில ஊடக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. 

டைம்ஸ் நெளவ்:
பாஜக 38
காங்கிரஸ் 28
ஆம் ஆத்மி 0
இதர 1

ஜன் கி பாத்:
பாஜக 32 - 40
காங்கிரஸ் 27 - 34
ஆம் ஆத்மி 0
இதர 1 - 2

பார்க்:
பாஜக 35 - 40
காங்கிரஸ் 20 - 25
ஆம் ஆத்மி 0 - 3
இதர 1 - 5

நியூஸ் எக்ஸ்:
பாஜக 32 - 40
காங்கிரஸ் 27 - 34
ஆம் ஆத்மி 0
இதர 0
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT