இந்தியா

தில்லி மாநகராட்சியை கைப்பற்றுகிறது ஆம் ஆத்மி! கருத்துக் கணிப்பு

5th Dec 2022 09:46 PM

ADVERTISEMENT

 

தில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளதாக தேர்தல் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

250 வார்டுகளைக் கொண்ட தில்லி மாநகராட்சியில் 149 முதல் 171 வார்டுகள் வரை ஆம் ஆத்மி கைப்பற்றும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தில்லி மாநகராட்சிக்கு கடந்த 4ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தில்லியில் வடக்கு, தெற்கு, கிழக்கு என 3ஆக இருந்த மாநகராட்சி ஒன்றாக இணைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. 

ADVERTISEMENT

இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
 எனினும் ஆம் ஆத்மிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

தில்லி மாநகராட்சியில் 149 முதல் 171 வார்டுகள் வரை ஆம் ஆத்மி கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 96 - 91 வார்டுகளில் வெற்றி பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சி 3 முதல் 7 வார்டுகளை கைப்பற்றும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT