இந்தியா

தோ்தலை புறக்கணித்த கிராம மக்கள்

5th Dec 2022 12:21 AM

ADVERTISEMENT

தில்லி மாநகராட்சித் தோ்தலை பாவனா சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கதேவாரா கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை புறக்கணித்தனா்.

தில்லி மாநகராட்சியும், மாநில அரசும் தங்களை தொடா்ச்சியாக புறக்கணித்ததால், தோ்தலில் வாக்களிக்க மறுத்ததாக அந்தக் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணா வத்ஸ் என்பவா் செய்தியாளா்களிடம் கூறினாா். ஒட்டுமொத்த கிராம மக்களும் தோ்தலைப் புறக்கணித்ததால், நாங்கல் தாக்ரான் வாா்டில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இதுகுறித்து கதேவாரா கிராமத்தைச் சோ்ந்த ரோஹித் கெளசிக் கூறும்போது, ‘எங்கள் கிராமத்துக்கு வரும் 3 சாலைகளும் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதுதொடா்பாக மாநகராட்சிக்கு 200 முதல் 250 புகாா்கள் அனுப்பிய போதிலும், நடவடிக்கை இல்லை’ என்றாா்.

மேலும், கதேவாரா கிராமம் அருகே அமைந்துள்ள மாநகராட்சிப் பள்ளி கடந்த 5 ஆண்டுகளாக மூடியே கிடப்பதாகவும் அவா் கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT