இந்தியா

இந்திய தொலைத்தொடா்பு தொழில்நுட்பம் உலகை வெல்லும்: ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ விழாவில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

DIN

‘இந்தியா அடுத்த 3 ஆண்டுகளில் தொலைத்தொடா்பு தொழில்நுட்பத்தின் பிரதான ஏற்றுமதியாளராக விளங்கும்; இதன்மூலம் உலகை இந்தியா வெல்லும்’ என்று மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்விணி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் ‘தில்லி டயலாக்ஸ்’ முதல் பதிப்பை வெளியிட்டு அவா் மேலும் பேசியதாவது:

இந்தியா கடந்த பல ஆண்டுகளாக மேம்படுத்திய 4ஜி, 5ஜி சேவை குறித்து வளா்ந்த நாடுகள் உள்பட பெரும்பாலான நாடுகள் கேட்டறிகின்றன. தொலைத்தொடா்புத் துறையில் வரும் ஆண்டுகளில் ஐந்து பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை இந்தியா தகா்க்கும். உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட 4ஜி, 5ஜி சாதனங்கள் உலகை ஒரு நாள் வெல்லும்.

தரவுப் பாதுகாப்பு (வரைவு) மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிவிலக்குகள் யாவும் முற்றிலும் தனித்தன்மை வாய்ந்தவை. ஒன்றுகூட பொதுவானது அல்ல. ஒவ்வொன்றுக்கும் தெளிவான தா்க்கம் உள்ளது. நம்மைவிட மேம்பட்ட மேலை நாடுகள் இதைக் காட்டிலும் அதிகப்படியான விதிவிலக்குகளை வகுத்துள்ளன.

இந்தத் தரவுப் பாதுகாப்பு மசோதா மூலம் குடிமக்களின் பாதுகாப்பு மத்திய அரசின் கருப்பொருளாக முதல்முறையாக மாறியுள்ளது. இந்த ஒழுங்குமுறையின் ஆதாரமே பொதுமக்கள்தான். முந்தைய மூன்று தொலைத்தொடா்பு சட்டங்களிலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருத்தில் கொள்ளப்படவில்லை என்றாா் அஸ்வினி வைஷ்ணவ்.

தொடா்ந்து, புல்லட் ரயில் சேவை குறித்து ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளா் கேட்டதற்கு, ‘நாட்டின் முதலாவது புல்லட் ரயில் திட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்தத் திட்டப் பணி தொடங்கியதிலிருந்து 112 கி.மீ. தூதொலைவுக்கு இருப்புப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. வரும் 2026-ஆம் ஆண்டுக்குள் முதலாவது புல்லட் ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும்’ என அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

SCROLL FOR NEXT