இந்தியா

இந்தியாவின் வளர்ச்சி இயந்திரம் இளைஞர்கள்! மத்திய அமைச்சர்

4th Dec 2022 08:32 PM

ADVERTISEMENT


ஹரியாணா: இளைஞர்களை நாட்டின் வளர்ச்சி இயந்திரம் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சரான அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்கள் செயல்திறனுடனும் புதுமையாகவும் இருக்க வேண்டும் என்றும் புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டு, தங்கள்  திறமையைத் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

ஹிசார் மாவட்டத்திலுள்ள ஓம் ஸ்டெர்லிங் குளோபல் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் அனுராக் தாக்குர் கலந்து கொண்டு உரையாற்றிய போது, பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை பிரிவை சார்ந்த துறைக்கு 90.0 'பவ்யவாணி' என்ற சமூக வானொலி நிலையத்தையும் அற்பணித்தார்.

இளைஞர்களை உலகம் முழுவதும் நம்பிக்கையுடன் பார்க்கிறது, ஏனென்றால் நீங்கள் நாட்டின் வளர்ச்சி இயந்திங்கள். இந்தியா தனது சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடி வரும் நிலையில், வரும் 2047க்குள் இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்றார்.

ADVERTISEMENT

இங்கு ஐஐடி, ஐஐஎம் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் இளைஞர்கள் தங்களைத் தாங்களே திறமைப்படுத்திக் கொள்ளவும், தொழில்துறைக்கு தயாராக இருக்கவும் உதவுகின்றன. எந்தவொரு நாட்டிலும், மக்களின் வளர்ச்சிக்கு கல்வி முதுகெலும்பாக உள்ளது என்றார்.

அதே வேளையில், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது. இந்தியாவில் 110 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தற்சமயம் யூனிகார்ன் அந்தஸ்தைப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். நாட்டில் 85,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன என்றார்.

பல்வேறு துறைகளில் சாதித்து பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த ஹரியாணா பெண்களை அவர் வெகுவாக பாராட்டினார்.  பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற மாணவர்களை அமைச்சர் வாழ்த்தினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT