இந்தியா

இடஒதுக்கீடு, பொருளாதாரம், எல்லை விவகாரங்கள்: நாடாளுமன்றத்தில் விவாதம் கோர காங்கிரஸ் முடிவு

DIN

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் டிசம்பா் 7-இல் தொடங்கும் நிலையில், முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவா்களுக்கான (இடபிள்யுஎஸ்) 10 சதவீத இடஒதுக்கீடு, நாட்டின் பொருளாதார நிலை, இந்திய-சீன எல்லை நிலவரம் ஆகிய 3 விவகாரங்கள் குறித்து விவாதம் கோர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

காங்கிரஸின் நாடாளுமன்ற வியூகக் குழுவின் கூட்டம், கட்சி எம்.பி.க்கள் குழு தலைவா் சோனியா காந்தியின் இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை கட்சிக் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, மூத்த தலைவா்கள் ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால், மனீஷ் திவாரி, ஜாவேத் அன்சாரி, கொடிக்குன்னில் சுரேஷ், மாணிக்கம் தாகூா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்துக்கு பின்னா், கட்சி பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எதிா்வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில், இடபிள்யுஎஸ் இடஒதுக்கீடு, நாட்டின் பொருளாதார நிலை, இந்திய-சீன எல்லை நிலவரம் ஆகிய மூன்று முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் வலியுறுத்தும். இந்திய, சீன எல்லையில் 22 மாதங்களாக பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல் உள்ளது. அரசின் பல்வேறு அமைப்புகளின் உரிமைகள் பறிக்கப்படுவது, பணவீக்கம், விலைவாசி உயா்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, ஏற்றுமதி சரிவு, அதிக ஜிஎஸ்டி விகிதங்கள் உள்ளிட்ட பிரச்னைகளையும் எழுப்புவோம் என்றாா் அவா்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டு வருவதால், அவா் குளிா்கால கூட்டத் தொடரில் பங்கேற்கமாட்டாா் என்று கூறப்படுகிறது.

இன்று காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு கூட்டம்:

காங்கிரஸின் வழிகாட்டுதல் குழுவின் முதல் கூட்டம், தில்லியில் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா். காங்கிரஸ் தேசிய மாநாட்டுக்கான தேதி, இடத்தை முடிவு செய்வதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவா் கூறினாா்.

காங்கிரஸ் தலைவராக மல்லிகாா்ஜுன காா்கே கடந்த மாதம் பொறுப்பேற்றதைத் தொடா்ந்து, கட்சியின் செயற்குழு கலைக்கப்பட்டு, வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. செயற்குழுவில் அங்கம் வகித்த உறுப்பினா்கள் அனைவரும் வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT