ராஜஸ்தானில் தலைமைக் காவலரை தாக்கியதாக பாஜக முன்னாள் எம்பி மீது வழக்குப்பதிவு கிருஷ்ணேந்திர கௌர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், முன்னாள் பரத்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணேந்திர கௌர். பாஜகவின் முன்னாள் எம்பியுமான இவர் அகாத் திராஹாவில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் தனது காரை நடுரோட்டில் நிறுத்தியிருக்கிறார்.
அப்போது அங்கு பணியில் இருந்த தலைமைக் காவலர் கஜ்ராஜ் சிங், கிருஷ்ணேந்திர கௌர் காரை கடந்து செல்லும்படி கூறியிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் தலைமைக் காவலரை தகாத வார்த்தையால் திட்டியதோடு மட்டுமல்லாமல் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கோட்வாலி காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் கஜ்ராஜ் சிங் முன்னாள் எம்பி மீது புகார் அளித்தார்.
இதையும் படிக்க- கனடாவைச் சேர்ந்த 21 வயதான டிக்டாக் பிரபலம் திடீர் மரணம்
இந்த புகாரையடுத்து பாதுகாப்பு அதிகாரிகளை தடுத்ததாகவும், தலைமைக் காவலரை தாக்கியதாகவும் பாஜக முன்னாள் எம்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக விரைவில் விசாரணை தொடங்கப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என்று காவல் உதவிக் கண்காணிப்பாளர் அனில் மீனா தெரிவித்தார்.