இந்தியா

குஜராத் தேர்தல்: தாயிடம் ஆசி பெற்றார் மோடி!

DIN


குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது தாயாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். 

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி குஜராத் வந்தடைந்தார். காந்தி நகரிலுள்ள அவரின் தாயான ஹீராபென் மோடியிடம் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். 

குஜராத்திலுள்ள 182 தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்றது. அதில் 63.75 சதவீத வாக்குகள் பதிவாகின.

அதனைத் தொடர்ந்து 93 தொகுதிகளுக்கு நாளை (டிச.5) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

குஜராத்தின் மத்திய மற்றும் வடக்குப் பகுதியில் இந்த தொகுதிகள் அமைந்துள்ளன. மொத்தம் 2.54 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 14 ஆயிரத்து 975 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன

குஜராத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் டிச. 8ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.

இந்நிலையில், குஜராத் சட்டப்பேரவையின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி காந்திநகரிலுள்ள தனது இல்லத்திற்குச் சென்று அவரின் தாயார் ஹீராபென்னிடம் ஆசி பெற்றார். அதனைத் தொடர்ந்து சிறிது நேரம் அவருடன் உரையாடினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT