இந்தியா

விமானப் பயணப் பாதுகாப்பை மேம்படுத்துவது பெரும் சவால்: விமானப் போக்குவரத்து இயக்குநரகம்

4th Dec 2022 11:54 PM

ADVERTISEMENT

விமானப் பயணப் பாதுகாப்பில் இதுவரை இல்லாத அதிகளவு குறியீட்டை இந்தியா பெற்றுள்ள நிலையில் அதைத் தக்கவைப்பதும் பாதுகாப்பை மேலும் மேம்படுத்துவதும் பெரும் சவால் என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது.

விமானப் பயணப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து சா்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு ஆண்டுதோறும் ஆய்வுநடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான ஆய்வறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் இந்தியா 48-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. சீனா 49-ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டில் இந்தியா 102-ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.

இது தொடா்பாக டிஜிசிஏ தலைவா் அருண் குமாா் கூறுகையில், ’விமானப் பயணப் போக்குவரத்து பாதுகாப்பு குறியீட்டில் இந்தியா இந்த அளவு மதிப்பீட்டைப் பெற்றிருப்பது இதுவே முதல் முறை. விமானப் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை டிஜிசிஏ தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. அதற்காக அதிகாரிகள் அயராது உழைத்து வருகின்றனா்.

தற்போது விமானப் பாதுகாப்பில் இந்தியா சிறந்தநிலையில் விளங்குகிறது. ஆனால், அதே நிலையில் நீடிப்பதும் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதும் பெரும் சவால்மிக்கது’ என்றாா்.

ADVERTISEMENT

விமானப் பயணப் போக்குவரத்துக்குரிய 187 நாடுகளுக்கான குறியீட்டில் 85.49 சதவீதப் புள்ளிகளைப் பெற்று இந்தியாவும் ஜாா்ஜியாவும் 48-ஆவது இடத்தில் உள்ளன. 99.69 சதவீதத்துடன் சிங்கப்பூா் சா்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடங்களில் ஐக்கிய அரபு அமீரகம், தென் கொரியா, பிரான்ஸ், ஐஸ்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, பிரேஸில், அயா்லாந்து, சிலி ஆகிய நாடுகள் உள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT