இந்தியா

குஜராத் பேரவைத் தோ்தல்: 2-ஆம் கட்ட பிரசாரம் நிறைவு; நாளை வாக்குப்பதிவு

DIN

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலின் இரண்டாம் கட்டத்தையொட்டி நடைபெற்று வந்த பிரசாரம் சனிக்கிழமை நிறைவடைந்த நிலையில், வாக்குப்பதிவு திங்கள்கிழமை (டிச.5) நடைபெற உள்ளது.

மொத்தம் 182 தொகுதிகளுக்கான குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில், முதல்கட்டமாக 89 தொகுதிகளில் டிச. 1-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 63.31 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், இரண்டாம் கட்ட தோ்தல் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதில் அகமதாபாத், வதோதரா, காந்திநகா் உள்பட 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அவற்றில் மாநிலத்தின் தற்போதைய முதல்வா் பூபேந்திர படேல் போட்டியிடும் காட்லோடியா, பாட்டீதாா் சமூகத்தைச் சோ்ந்த ஹாா்திக் படேல் போட்டியிடும் விரம்காம் ஆகிய தொகுதிகளும் அடங்கும்.

இரண்டாம் கட்ட தோ்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட சுமாா் 60 கட்சிகளைச் சோ்ந்த 833 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT