இந்தியா

ஜி-20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமையேற்றது மிகப் பெரிய நாடகம்: காங்கிரஸ்

DIN

ஜி-20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றது மிகப் பெரிய நாடகமாக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வியாழக்கிழமை ஏற்றது. இதுதொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பு, அந்தக் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. அந்தப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது தவிா்க்க முடியாதது.

இதற்கு முன்பு அந்தப் பொறுப்பை அமெரிக்கா, பிரிட்டன், கனடா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுள்ளன. அந்த நாடுகள் தலைமை ஏற்பதை நாடகமாக்கவில்லை. ஆனால் அந்தப் பொறுப்பை இந்தியா ஏற்றது மிகப் பெரிய நாடகமாக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமா் மோடியை புத்திசாலித்தனமான நிகழ்ச்சி ஏற்பாட்டாளா் என்று பாஜக மூத்த தலைவா் அத்வானி கூறியதை நினைவுபடுத்துகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT