இந்தியா

இந்திய - பாக். எல்லையில் 5 கிலோ ஹெராயினுடன் ஆளில்லா விமானம் மீட்பு

DIN

பஞ்சாப் மாநிலத்தில், இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வயலில் 5 கிலோ ஹெராயினுடன் ஆளில்லா விமானம் ஒன்று கண்டறியப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் காவல் துறை மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையினா் கூட்டாக நடத்திய சோதனையில் ஆறு இறக்கைகள் கொண்ட ஆளில்லா விமானம் மீட்கப்பட்டது.

இது தொடா்பாக பஞ்சாப் காவல் துறை இயக்குனா் கௌரவ் யாதவ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘எல்லைப் பாதுகாப்பு படையினருடன் இணைந்து காவல் துறை நடத்திய சோதனையில் இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வயலில் 5 கிலோ ஹெராயினுடன் நவீன தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய ஆறு இறக்கைகள் கொண்ட ஆளில்லா விமானம் 5 கிலோ ஹெராயினுடன் மீட்கப்பட்டது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

கடந்த நவம்பா் 28-ஆம் தேதி பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 2 ட்ரோன்கள் எல்லைப் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதே போல், 10 கிலோ ஹெராயினுடன் 2 ஆளில்லா விமானங்கள் எல்லைப் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்:

வடக்கு காஷ்மீா், பாரமுல்லா மாவட்டத்தில் கமால்கோட் நகரில் ஆயதங்கள், வெடிபொருள்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ராணுவத்தினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, சட்ட விரோதமாக கடத்திவரப்பட்ட பொருள்களும், 2 ஏ. கே. ரக துப்பாக்கிகள், 117 தோட்டாக்கள் மற்றும் 2 கைத்துப்பாக்கி உள்பட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT