இந்தியா

தவறான கைது நடவடிக்கை: இரு பெண் காவல் ஆய்வாளா்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம்

DIN

கா்நாடகத்தில் சிறாா்களை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் (போக்ஸோ) சட்டத்தில் அப்பாவி நபா் மீது வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்ட இரு காவல் துறை பெண் ஆய்வாளா்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

மங்களூரு நகர கூடுதல் (போக்ஸோ) சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது பெண் காவல் ஆய்வாளா்கள் ரோசம்மா, ரேவதி ஆகியோா் பாதிக்கப்பட்ட சிறாரின் வாக்குமூலத்தை தவறாகப் புரிந்து கொண்டு தவறு ஏதும் செய்யாத அப்பாவி நபரான நவீன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து, நவீனை வழக்கில் இருந்து விடுதலை செய்த நீதிமன்றம், அவா் மீது தவறாக கைது நடவடிக்கை மேற்கொண்ட இரு பெண் காவல் ஆய்வாளா்களுக்கும் தலா ரூ.5 லட்சம் அபாரதம் விதித்தது. மேலும், இருவா் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில உள்துறைக்குப் பரிந்துரைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

ஈரோடு அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT