இந்தியா

2023 முதல் ரயில்வே தேர்வுகளை யுபிஎஸ்சி நடத்தும்: இந்திய ரயில்வே

3rd Dec 2022 11:14 AM

ADVERTISEMENT

புது தில்லி: இந்திய ரயில்வே மேலாண்மை சேவைக்கான காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்புக்கு 2023 முதல் யுபிஎஸ்சியால் நடத்தப்படும் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட தேர்வு மூலம் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய ரயில்வே மேலாண்மை சேவை தேர்வு (ஐஆர்எம்எஸ்இ) என்பது இரண்டு அடுக்குத் தேர்வாக இருக்கும் -- முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலைத் தொடர்ந்து சோதனைத் தேர்வு நடத்தப்படும்

இதையும் படிக்க.. அடிக்கிறது ஜாக்பாட்! சென்னை சென்ட்ரல் போல முனையமாக மாறவிருக்கும் பரங்கிமலை

ஐஆர்எம்எஸ் (முதன்மை) எழுத்துத் தேர்வில், தகுதிபெறும் அனைத்து விண்ணப்பதாரர்களும் சிவில் சர்வீசஸ் (முதன்மை) தேர்வில் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஐஆர்எம்எஸ் (முதன்மை) தேர்வு நான்கு தாள்களைக் கொண்டிருக்கும், பாடத் தொகுப்புகளில் வழக்கமான கட்டுரை வகை கேள்விகள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து.

முதலாவது தேர்வானது, தலா 300 மதிப்பெண்கள் கொண்ட இரண்டு தாள்களைக் கொண்டிருக்கும், அதாவது, தேர்வர்கள் தேர்ந்தெடுக்கும் இந்திய மொழிகளில் ஒன்று தாள் ஏ மற்றும் ஆங்கிலத் தேர்வு பி தாள் என இரண்டுத் தேர்வுகள் இடம்பெறும்.

பிறகு, விருப்ப பாடங்களில் தலா 250 மதிப்பெண்களுக்கு இரண்டு தாள்கள் இருக்கும். இதோடு, 100 மதிப்பெண்களுக்கு தனத்திறன் தேர்வும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT