இந்தியா

எரிபொருள் விலை உயர்வு: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

3rd Dec 2022 07:47 PM

ADVERTISEMENT

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை சுட்டிக்காட்டி  பிரதமர் நரேந்திர மோடியை தாக்கிப் பேசியுள்ளார்.

காங்கிரஸ் மேற்கொண்டுள்ள பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணம் மக்களாட்சியினை காக்கவும், கொள்ளையடிப்பவர்களிடம் இருந்து நாட்டினைப் பாதுகாக்கவும் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

இதையும் படிக்க: முதல் டெஸ்ட்: இங்கிலாந்துக்கு ஈடு கொடுத்ததா பாகிஸ்தான்

இது குறித்து ட்விட்டர் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: உலக நாடுகளில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், மத்திய அரசு எரிபொருள்களின் விலையினை குறைக்கவில்லை. கச்சா எண்ணெய் 25 சதவிகிதம் மலிவு. எரிவாயு சிலிண்டர் விலை 40 சதவிகிதம் மலிவு. சர்வதேச சந்தையில் எரிபொருள்களின் விலை குறைவாக உள்ளதற்கான தரவு இதுவாகும். சர்வதே அளவில் எரிபொருள்களின் விலை குறைவாக இருக்கும்போது, மத்திய அரசு ஏன் எரிபொருள்களின் விலையினை குறைக்கவில்லை. பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணம்  மத்திய அரசின் கொள்ளையடிக்கும் தந்திரத்துக்கு எதிராக மக்களாட்சியைப் பாதுகாக்க முன்னெடுக்கப்பட்டுள்ளது எனப் பதிவிட்டுள்ளார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT