இந்தியா

பஞ்சாபி பாடகா் மூஸேவாலா கொலை:அமெரிக்காவில் கோல்டி பிராா் கைது?

DIN

பஞ்சாபி பாடகா் சித்து மூஸேவாலாவின் கொலைக்கு காரணகா்த்தாவான கோல்டி பிராா் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மே மாதம் பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் சித்து மூஸேவாலா என்ற பஞ்சாபி பாடகா் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரின் கொலைக்கு கோல்டி பிராா் என்பவா் பொறுப்பேற்றாா். கடந்த 2017-ஆம் ஆண்டு கனடா சென்ற அவா், பஞ்சாபில் உள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தைச் சோ்ந்தவா்.

இதையடுத்து, மத்திய புலனாய்வு அமைப்பின் கோரிக்கையை ஏற்று கோல்டி பிராருக்கு எதிராக சா்வதேச காவல் துறையான இன்டா்போல் ரெட் காா்னா் நோட்டீஸ் பிறப்பித்தது. இது வெளிநாடுகளில் உள்ள குற்றவாளிகளைத் தேடப்படும் நபராக அறிவிக்கும் நோட்டீஸ் ஆகும்.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள காலிஃபோா்னியா பகுதியில் கோல்டி பிராரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அந்தத் தகவல் அதிகாரபூா்வமாக உறுதி செய்யப்படவில்லை என்று பஞ்சாப் காவல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT