இந்தியா

ம.பி.யில் திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 20 பேருக்கு உடல்நலப் பாதிப்பு! 

3rd Dec 2022 11:41 AM

ADVERTISEMENT

 

மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வெள்ளிக்கிழமை இரவு தார் பகுதியில் உள்ள தம்னோத் திருமண விழாவில் உணவு சாப்பிட்ட பிறகு, பலருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் உள்ள ஆரம்பச் சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். 

படிக்க: 40 ஆயிரத்துக்குக் குறையாத ஒரு சவரன் தங்கம்!

ADVERTISEMENT

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 பேரும் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும், சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, திருமண விழாவில் சமைத்த உணவு விஷமாக மாறியுள்ளது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT