இந்தியா

ஐஐடி மாணவர் சேர்க்கை: மீண்டும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் அளவுகோல்

DIN

ஐஐடி மாணவர் சேர்க்கையில் கரோனாவுக்கு முந்தைய நடைமுறைப்படி, மீண்டும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்ணையும் அளவுகோலாக நிர்ணயிப்பது என்று முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் அதாவது ஐஐடிக்களில் மாணவர்கள் படிக்க வேண்டுமெனில், கூட்டு சேர்க்கை வாரியம் எனப்படும் ஜேஏபி நடத்தும் ஜேஇஇ மேம்படுத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, முதல் 20 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருப்பது அவசியம்.

கரோனா பொதுமுடக்கப் பிரச்னையால் பல்வேறு மாநிலங்களில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக ஐஐடி மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் தளர்வு அறிவித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு அவசியமில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இனி வரும் காலங்களில் ஐஐடி மாணவர் சேர்க்கையில் கரோனாவுக்கு முந்தைய நடைமுறையை பின்பற்ற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கரோனா பேரிடர் காலத்துக்கு முன்பு, ஜே.இ.இ (மேம்பட்ட) தேர்வில் பொதுவகை தரவரிசை வைத்திருப்பவர் ஐ.ஐ.டி-யில் ஒரு இடத்தைப் பெறுவதற்கு 12ஆம் வகுப்புத் தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஜேஇஇ தேர்வுகளில் முதல் 20 சதவிகித இடங்களுக்குள் இருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

டி20 உலகக் கோப்பைக்கான விளம்பரத் தூதராக உசைன் போல்ட் நியமனம்!

தண்ணீரை சேமிக்க ரயில்வேயின் புதிய முயற்சி!

SCROLL FOR NEXT