இந்தியா

ஹிமாசலில் மிதமான நிலநடுக்கம்!

3rd Dec 2022 03:09 PM

ADVERTISEMENT

 

ஹிமாசலப் பிரதேசத்தில் சாம்பா மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது

இந்த நிலநடுக்கமானது வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்டுள்ளது. சாம்பா மாவட்டத்தின் திஸ்ஸா பகுதிக்கு அருகில் உள்ள தார் மக்கான் என்ற இடத்தில் ஏற்பட்டதாகப் பேரிடர் மேலாண்மை சிறப்ப செயலாளர் சுதேஷ் மோக்தா தெரிவித்தார். 

ADVERTISEMENT

படிக்க: திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் திட்டமிட்டிருந்த பேரணிக்கு அருகே குண்டு வெடிப்பு: 2 பேர் பலி! 

சில நொடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, உடமை சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை என்றார். 

Tags : earthquake
ADVERTISEMENT
ADVERTISEMENT