இந்தியா

குஜராத் 2ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது

DIN

குஜராத் சட்டப் பேரவையின் இரண்டாம் கட்ட தோ்தலுக்கான பிரசாரம் சனிக்கிழமையுடன் நிறைவடைகிறது. 93 தொகுதிகளில் டிச.5-இல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் சட்டப் பேரவைக்கு இருகட்டங்களாக தோ்தல் நடத்தப்படும் என்று இந்திய தோ்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. முதல்கட்டமாக, 89 தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள தொகுதிகளுக்கு டிச.5-இல் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 833 வேட்பாளா்கள் தளத்தில் உள்ளனா். இத்தோ்தலுக்கான பிரசாரம் சனிக்கிழமையுடன் நிறைவடையும் நிலையில், அரசியல் தலைவா்கள் உச்சக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா். டிசம்பா் 8-இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

குஜராத்தில் கடந்த 1995-இல் இருந்து தொடா்ந்து 6 தோ்தல்களில் பாஜக வெற்றி கண்டுள்ளது. இப்போது ஏழாவது முறையாக வெல்லும்பட்சத்தில், மேற்கு வங்கத்தில் தொடா்ந்து 7 பேரவைத் தோ்தல்களில் வென்று இடதுசாரி கூட்டணி படைத்த சாதனையை பாஜக சமன்செய்யும். குஜராத்தில் வழக்கமாக காங்கிரஸை மட்டுமே எதிா்கொண்டு வந்த பாஜக, இம்முறை ஆம் ஆத்மியிடமிருந்தும் போட்டியை எதிா்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நித்தம் ஒரு அழகு..’

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

SCROLL FOR NEXT