இந்தியா

மகாராஷ்டிரம்: ஷிவ்னி வனப்பகுதியில் இறந்த நிலையில் நான்கு புலிக் குட்டிகள்

3rd Dec 2022 06:17 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலத்தின் ஷிவ்னி வனப்பகுதியில் இறந்த நிலையில் நான்கு புலிக் குட்டிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், சந்திராபூர் மாவட்டத்தில் தடோபா-அந்தாரி புலிகள் சரணாலயம் உள்ளது. இங்குள்ள ஷிவ்னி வனப்பகுதியில் இன்று காலை 4 புலிக் குட்டிகள் இறந்து கிடந்ததாக வன அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மேலும், நவம்பர் 30 ஆம் தேதி புலி (டி-75) இறந்து கிடந்த இடத்திற்கு அருகே உள்ள இடத்தில் சடலங்கள் காணப்பட்டன. குட்டிகளில் காயங்கள் காணப்பட்டன, அவை புலியால் கொல்லப்பட்டதைக் குறிக்கிறது. சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்படும்.

இதையும் படிக்க- உலகக் கோப்பை: நாக் அவுட் சுற்றுகளின் அட்டவணை

ADVERTISEMENT

குட்டிகள் மற்றும் இறந்த புலியின் திசு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு தாயின் அடையாளம் கண்டறியப்படும். கண்காணிப்பு கேமரா உதவியுடன் மற்ற புலிகளின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று அவர் கூறினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT