இந்தியா

தில்லி மாநகராட்சி தேர்தல்: பாதுகாப்புப் பணியில் 40 ஆயிரம் போலீசார்!

3rd Dec 2022 03:40 PM

ADVERTISEMENT

 

டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள தில்லி மாநகராட்சி தேர்தலில் பாதுகாப்புப் பணியில் 40 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 

நாளை நடைபெற உள்ள உள்ளாட்சித்  தேர்தலை முன்னிட்டு எந்தவித இடையூறும் இன்றி நடைபெற தலைநகரின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் என மொத்தம் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

ADVERTISEMENT

தேர்தல் பணிக்காக அண்டை மாநிலங்களான உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியாணாவில் இருந்து மொத்தம் 20 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். 

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக அசம்பாவிதம் நடைபெறும் பகுதிகளில் அதிகளவிலான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளது. 

படிக்க: திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் திட்டமிட்டிருந்த பேரணிக்கு அருகே குண்டு வெடிப்பு: 2 பேர் பலி! 

நகர் முழுவதும்13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அசம்பாவிதம் நடைபெறும் நெருக்கடியான பிரிவின் கீழ் வருகிறது. 

தேர்தல் பணிகள் அமைதியாக நடக்கும்வகையில் மொத்தம் 108 மத்திய ஆயுதப்படை மற்றும் மாநில ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

மேலும், போலீசார் ட்ரோன்களின் உதவியுடன் இனவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்காணிக்கும். மேலும் சாவடிகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு பொதுமக்கள் 1090 என்ற எண்ணில் புகாரளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1.45 கோடி பேர் ஓட்டுப்போடும் தகுதியைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT