இந்தியா

நடைப்பயணத்தில் கவனம் செலுத்தும் ராகுல், அவமதிப்பு வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்

3rd Dec 2022 03:52 PM

ADVERTISEMENT

ஒற்றுமை நடைப்பயணத்தில் கவனம் செலுத்தி வருவதால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கை ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது மகாராஷ்டிர நீதிமன்றம்.

ஆர்.எஸ்.எஸ். குறித்தும் மகாத்மா காந்தியின் இறப்பு குறித்தும் அவதூறாக பேசியதாக ராகுல் குண்டே என்பவர் காங்கிரஸ் தலைவர் ரகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று (டிசம்பர் 3) விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், மகாராஷ்டிரத்தின் தானே மாவட்ட நீதிமன்றம் ராகுல் காந்திக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்துள்ளது.

இதையும் படிக்க: ஓடாத படத்துக்கு வெற்றி விழாவா? ரசிகர்கள் கிண்டல்! 

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கு ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராவதற்கு தற்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 7 ஆம் தேதி நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜராவதில் இருந்து நிரந்தரமாக விலக்களிக்க கேட்க உள்ளோம் என்றார்.

ADVERTISEMENT

ராகுல் காந்தி மீது அவமதிப்பு வழக்கைத் தொடுத்த நபர் ஊரில் இல்லாததால் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்துக்கு வராதது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT