இந்தியா

திருப்பதியில் தமிழிசை சுவாமி தரிசனம்: தரிசன நேர மாற்றத்துக்கு பாராட்டு

3rd Dec 2022 05:42 PM

ADVERTISEMENT


திருப்பதி: தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்  இன்று (03/12/2022) திருப்பதி அருள்மிகு ஏழுமலையான் திருக்கோயிலில் தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த தமிழிசை சௌந்தராஜனுக்கு, கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் மற்றும் ஏழுமலையான் படத்துடன் 2023ஆம் ஆண்டுக்கான நாள்காட்டியும் வழங்கப்பட்டது.

அப்போது, காலை 5 மணிக்கு இருந்த விஐபி தரிசன நேரத்தை காலை 10 மணிக்கு மாற்றி இரவு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு இறைவனை தரிசனம் செய்ய வரும் பொதுமக்கள் காலையில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் நேரம் மாற்றப்பட்டதற்கும் தமிழிசை பாராட்டுதலை தெரிவித்துள்ளார்.

அதாவது, விஐபி தரிசன நேரத்தை மாற்றி அமைத்து பொதுமக்கள்  பயன்பெறும் வகையில் மக்களுக்கு முன்னுரிமை அளித்து தரிசன நேரத்தை மாற்றியமைத்த திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தினருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT