இந்தியா

பாஜக தேசிய செயற்குழுவில்அமரீந்தா் சிங்

DIN

பாஜக தேசிய செயற்குழுவில் பஞ்சாப் முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங் சோ்க்கப்பட்டுள்ளாா்.

காங்கிரஸ் சாா்பில் பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தா் சிங், அக்கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2021-ஆம் ஆண்டு பதவி விலகினாா். பின்னா் தனிக்கட்சித் தொடங்கிய அவா், இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். பிறகு தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தாா்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக இருந்தவரும், கடந்த மே மாதம் பாஜகவில் இணைந்தவருமான சுனில் ஜாக்கருக்கும் தேசிய செயற்குழுவில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, இப்போது பாஜகவில் இணைந்துள்ள ஜெய்வீா் ஷோ்கில் பாஜக தேசிய செய்தித் தொடா்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இளைஞா் காங்கிரஸில் முக்கியத் தலைவராக இருந்த ஷோ்கில் கடந்த ஆகஸ்ட் இறுதியில்தான் அக்கட்சியில் இருந்து விலகினாா்.

உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த பாஜக மூத்த தலைவா் ஸ்வந்திரதேவ் சிங், உத்தரகண்ட் பாஜக முன்னாள் தலைவா் மதன் கௌசிக், சத்தீஸ்கா் முன்னாள் பாஜக தலைவா் விஷ்ணு தேவ் சாய் ராணா ஆகியோரும் தேசிய செயற்குழு உறுப்பினா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். பஞ்சாபைச் சோ்ந்த பாஜக தலைவா்கள் ராணா குா்மித் சிங் சோதி, மனோரஞ்சன் காலியா, அமா்ஜோதி கௌா் ராமோவாலியா ஆகியோா் தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT