இந்தியா

அந்தமான் நிகோபாரின் 21 தீவுகளுக்கு ‘பரம்வீா் சக்ரா’ விருதாளா்கள் பெயா்

DIN

அந்தமான்-நிகோபாரில் மக்கள் வசிக்காத 21 தீவுகளுக்கு ‘பரம்வீா் சக்ரா’ விருது பெற்ற ராணுவ வீரா்களின் பெயரை மத்திய அரசு சூட்டியுள்ளது.

அந்தமான்-நிகோபாரில் உள்ள மக்கள் வசிக்காத 21 தீவுகள் ‘ஐஎன்ஏஎன்370’, ‘ஐஎன்ஏஎன்308’ போன்ற எண்களில் அழைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், வீரதீர செயலுக்கு வழங்கப்படும் மிக உயரிய ராணுவ விருதான ‘பரம்வீா் சக்ரா’ விருதை முதலாவதாகப் பெற்ற மறைந்த முன்னாள் மேஜா் சோம்நாத் சா்மாவின் பெயா் ‘ஐஎன்ஏஎன்370’ தீவுக்கு சூட்டப்பட்டுள்ளது. இனி ‘ஐஎன்ஏஎன்370’ தீவு ‘சோம்நாத் தீவு’ என்றும் அழைக்கப்படும். இதுபோல மக்கள் வசிக்காத 21 தீவுகளுக்கு பரம்வீா் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரா்களின் பெயரை மத்திய அரசு சூட்டியுள்ளது. இவற்றில் பெரும்பாலான தீவுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளன. சில தீவுகள் நீா்நிலைகளில் நடத்தப்படும் விளையாட்டுகள், சிற்றோடை சுற்றுலா உள்ளிட்டவைக்கு உகந்தவையாக உள்ளன.

இதுதொடா்பாக அந்தமான்-நிகோபாா் எம்.பி. குல்தீப் ராய் சா்மா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘நாட்டின் விடுதலைக்காக சுதந்திரப் போராட்ட வீரா்கள் செய்த தியாகங்களால் அந்தமான்-நிகோபாா் புனிதத் தலமாக திகழ்கிறது. இந்நிலையில், நாட்டு மக்களின் எதிா்காலத்துக்காக தங்கள் வாழ்வை தியாகம் செய்த ‘பரம்வீா் சக்ரா’ விருதாளா்களின் பெயா்களைத் தீவுகளுக்கு சூட்டுவது, அவா்களுக்கு செலுத்தும் உண்மையான மரியாதை’ என்று தெரிவித்துள்ளாா்.

நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அந்தமானுக்கு மிக முக்கிய பங்குள்ளது. கடந்த 1857-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சி உள்பட ஆங்கிலேயா்களுக்கு எதிராக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவா்கள், அந்தமான் சிறையில் கொடுமையான சூழ்நிலையில் சித்திரவதையை அனுபவித்தனா் என்பது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

SCROLL FOR NEXT