இந்தியா

உ.பி.: போக்ஸோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

3rd Dec 2022 12:49 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேசம் மாநிலம், பலியா மாவட்டத்தில் ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போக்ஸோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

இவ்வழக்கு தொடா்பாக காவல் துறை கண்காணிப்பாளா் ஆா்.கே.நய்யாா் கூறியதாவது: கடந்த ஜூலை மாதம் 18-ஆம் தேதி பாலியா மாவட்டத்தில் ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக சுனில்குமாா் என்பவா் கைது செய்யப்பட்டு இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணை நடைபெற்று அவா் மீதான குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது என்றாா்.

கடந்த நவம்பா் மாதம் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற வழக்கு விசாரணையில் இரு தரப்பு வாதங்களயும் கேட்ட நீதிபதி, விசாரணையின் முடிவில் சுனில் குமாா் மீது குற்றம் உறுதியானதால் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT