இந்தியா

இந்தியாவில் விசா காலதாமதத்தைக் குறைக்க தீவிர முயற்சி: அமெரிக்க தூதா்

3rd Dec 2022 12:57 AM

ADVERTISEMENT

இந்தியா்களுக்கு அமெரிக்க விசா வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தைக் குறைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதா் எலிசபெத் ஜோன்ஸ் தெரிவித்துள்ளாா்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்ல வணிகம் தொடா்பான பி1 மற்றும் சுற்றுலாவுக்கான பி2 உள்ளிட்ட விசாக்கள் வழங்கப்படுவதில் நீண்ட காலதாமதம் நிலவி வருகிறது. முதல் முறையாக இவ்விரு விசாக்களையும் பெற 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.

இது குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்களின் சந்திப்பின்போது, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் எலிசபெத் ஜோன்ஸ் கூறியதாவது: விசா வழங்குவதில் நிலவும் பிரச்னைகள் குறித்து அமெரிக்கா கவனத்தில் கொண்டுள்ளது. கரோனா பெருந்தொற்றினால் உலகின் பல்வேறு பகுதிகளிலும் விசா வழங்குவதில் ஏற்பட்டுள்ள பின்னடைவு இத்தகைய நீண்ட காலதாமதத்துக்கு காரணமாகும்.

இந்தியாவில் விசாவுக்கான தேவை அதிகரித்து வருவதால், இங்கு இப்பிரச்னை மிகவும் தீவிரமாகவே உள்ளது. விசா வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தைக் குறைக்க புதிய தூதரக அலுவலா்களைத் தோ்ந்தெடுப்பது மற்றும் அவா்களுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவா்களில் பெரும்பாலானோா் வரும் கோடை காலத்துக்குள் தில்லியில் உள்ள தூதரகம் மற்றும் பிற பகுதிகளில் உள்ள துணை தூதரகங்களில் விசா வழங்குதல் மற்றும் நோ்காணல் செய்யும் பணிகளில் பணியமா்த்தப்படுவா். நிகழாண்டு இந்திய மாணவா்கள் 82,000 பேருக்கு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹெச்1பி விசா வழங்குவதிலும் ஏற்பட்டுள்ள காலதாமதத்தைக் குறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது என அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

அமெரிக்க நிறுவனங்களால் குறிப்பிட்ட பணிகளுக்காகப் பணியமா்த்தப்படும், வெளிநாட்டு பணியாளா்களுக்கு ஹெச்1பி விசா வழங்கப்படுகிறது. இவ்விசா பெறுவோரில் பெரும் பகுதியினா் இந்தியராவா். பிற பணி சாா்ந்த விசாக்கள் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் திறன்சாா் வெளிநாட்டு பணியாளா்களுக்கு வழங்கப்படுகிறது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT