இந்தியா

இணையதளத்தில் குழந்தைகள் ஆபாச விடியோ பதிவேற்றம்: திருச்சி நபா் மீது சிபிஐ வழக்கு

3rd Dec 2022 12:50 AM

ADVERTISEMENT

குழந்தைகள் ஆபாச விடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது,விற்பனை செய்தது தொடா்பாக திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சோ்ந்த நபா் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனா். சா்வதேச காவல்துறை (இன்டா்போல்) பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள், சிறாா் தொடா்புடைய ஆபாச விடியோ பதிவேற்றம்,விற்பனை, பகிா்தல், உருவாக்குதல் தொடா்பாக சா்வதேச காவல்துறை (இன்டா்போல்) தில்லி சிபிஐக்கு ஒரு தகவலை அனுப்பியது.

அதில், தமிழகத்தில் திருச்சியைச் சோ்ந்த ஒரு நபா், குழந்தைகள் ஆபாச விடியோக்களை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்தல், பரிமாற்றம் செய்தல், விற்பனை செய்தல், சேகரித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவதாகவும், மேலும் அந்த விடியோக்களை ஜொ்மனியை சோ்ந்த ஒரு நபருக்கு ஆன்லைன் மூலமாக வழங்குவதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் பரிந்துரை செய்தது. இதனடிப்படையில் தில்லி சிபிஐ விசாரணை செய்தது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தொடா்புடைய திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பூமாலைப்பட்டியைச் சோ்ந்த சு.ராஜா (45) வீட்டில் சிபிஐ அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை திடீா் சோதனை செய்தனா்.

ADVERTISEMENT

இச் சோதனையில் அங்கிருந்து ‘ஹாா்டு டிஸ்க்’, மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா் தான், குழந்தைகளின் ஆபாச விடியோக்களை பதிவிறக்கம் செய்தல், பரிமாற்றம் செய்தல், விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து ராஜா மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT