இந்தியா

சத்தீஸ்கரில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் இடிந்து விழுந்தது: 7 பேர் பலி!

2nd Dec 2022 04:44 PM

ADVERTISEMENT

 

சத்தீஸ்கரின், பஸ்தார் மாவட்டத்தில் மால்கான் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் மாவட்டத்தின் தலைமையகமான ஜன்தல்பூரில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள நகர்நார் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மால்கான் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. 

சுரங்கத்தில் சுண்ணாம்புக்கல்லை வெட்டி எடுக்கும்போது, அதன் ஒரு பகுதி சரிந்து விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

ADVERTISEMENT

படிக்க: தமிழகத்தில் 5 நாள்களுக்கு மிதமான மழை தொடரும்!

மேலும் இருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போது  உயிரிழந்தனர். முதற்கட்ட தகவலின்படி, 7 பேர் மட்டுமே சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் பணியில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT